ஸ்ரீ சக்ராப்ஜ மண்டல தீக்ஷா
पञ्चरात्रोक्तमार्गेण ये दीक्षां चक्रमण्डले । कृत्वासमर्चनं विष्णोःद्वीषट्काक्षरविद्यया ।। आरगधयन्तिशास्त्रोक्तविधिना देशिकोक्तमाः । तेषांहृदम्बुजे साक्षादाविरास्ते परः पुमान् ।। तरन्ति विष्णुमायां ते न तरन्तीतरेजनाः पाद्मे (6-31- 33) ஸ்ரீய: பதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் ஸர்வரக்ஷகனாய் ஸ்ர்வநியந்தாவான ஸ்ரீமந் நாராயணன், வாசுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தன் என்று சதுர்வித மூர்த்தியாய், பரம் வ்யூகம் விபவம் அந்தர்யாமி என்றும், பக்தர்களுக்கு பக்தியை ஊட்டுவதற்கு அர்ச்சாத் திருமேனியாய் திருகோயில்கள் தோறும் எழுந்தருளியுள்ளான். அந்த பகவானுக்கு சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு என்ற ஆழ்வாரின் வாக்குபடி பகவத் ஆராதனைகள் குறைவில்லாமல் நடைபெறும் முகமாகவும், பழம்பெறும் ஆலயங்களில் பகவத் ஆராதனம் திறம்பட செய்யும் ஆகம வல்லுநர்கள் தற்காலத்தில் அரிதாகி குறைந்து காணப்படும் நிலையினை நிவர்த்தி செய்யும் வண்ணம், பயிற்சி பெற்ற ஆகம வல்லுநர்களையும், உபய வேதாந்திகளையும் உருவாக்கும் முயற்சியாகவும், திருநாங்கூர் திவ்ய தேசங்களில் நடுநாயகமாக, ஸ்ரீ வண்புருஷோத்தம பெருமாள்…