
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா
(கலி தொடங்கி இப்பொழுது 5111-4600 வருஷங்களாக திருவாய்மொழி-இராப்பத்து உத்சவம் திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைத்தது-நாதமுனிகள் ஏற்பாட்டால் பகல் பத்தும் இராப்பத்தும் இயற்பாவும்-ஆக 21 நாள்கள் திருவேங்கடத்தில் மேலும் 2 நாள்கள் இராமானுஜநூற்றந்தாதி தனியாக ஒரு நாள் -அனந்தாழ்வான் ஏற்பாடு தண்ணீர் உத்சவம் -திருமலை நம்பி வம்சத்தாருக்காக) (தர்ம வர்மா திருச்சுற்று ராஜமகேந்திரன் திருச்சுற்று குலசேகரன் திருச்சுற்றுஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதி திருவிக்ரமன்திருச்சுற்று உத்தர வீதி -உள்துறையார்கள் -அந்தரங்க கைங்கர்யபரர்கள் -ஆயிரம்கால் மண்டபம் மேல் நம்பெருமாள் இருக்க தாளம் இசைத்துப் பாடுவதைக்கேட்டு மகிழ்வானாம் சித்ர வீதி –ஆக ஏழு பிரகாரங்கள் -மாட மாளிகைகள் சூழ் திருவீதி இதுவே -முன்பு இதற்கு வெளியில் தான் குடியிருப்பாம்)
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாய்இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் சகல ஆத்மாக்களோடு தனக்கு யுண்டான சம்பந்தம் ஒத்து இருக்க –சிலர் தன்னை அனுபவித்து வாழ்ந்தும் – சிலர் இழந்து கொண்டு அசித்கல்பராய்ப் போரவும்கண்டு-திருவுள்ளம் கலங்கி – இவர்கள் நம்மைக்கிட்டி அனுபவிக்கும் விரகு ஏதோ -என்று பார்த்து – சம காலீநர்க்கு ஆஸ்ரயண உபயோகியான விபவங்கள் போல் அன்றிக்கே, பின்னானார் வணங்கும் சோதி (திரு மூழிக் களத்தானே) -என்கிறபடியே -எல்லாக்காலத்திலும் – எல்லா தேசங்களிலும் – எல்லார்க்கும் ஆஸ்ரயணம் ஸூலபமாம்படிபண்ணி அர்ச்சாவதாரமாய் ஸ்ரீகோயில் முதலான திருப்பதிகள் தோறும் – க்ருஹங்கள் தோறும் நித்யசந்நிதி பண்ணி –ஆஸ்ரித பராதீனனாயும் -ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பட்ட நாதாதி பக்த முக்தராலும் அநேக ஆத்மாக்கள் உஜ்ஜீவிக்கும் படி ரஷித்து அருளா நிற்கிற காலத்திலே- ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும் – வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற் கணார் கல்வியே கருதி -என்று ஸ்ரீ சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் தொடைக் கீழே கிடக்கிறதோ -என்று சங்கிக்க வேண்டும்படி –அதிசய அஹங்கார உக்தராய் – அதுக்கடியான தேஹாத்ம அபிமாநத்தை யுடையராய் –ஆத்ம விஷய மாதல் -ஈஸ்வர விஷயமாதல் -ஒரு ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத படி விஷய ப்ரவணராய் இருக்க – இவரை இது நின்றும் எடுக்க விரகு பார்த்து -இவருக்கு விஷயங்களில் யுண்டான ரசிகத்வமே பற்றாசாக தன் அழகையும் – (ஸூஸேக்ஷண –அவனது அழகே நம்மைத் திருத்த வைக்கும் உபகரணம் ஐயப்பாடு அறுக்கும் அழகன்ஆதரம் பெறுக வைத்த அழகன் ஒருநாள் முகத்தில் விளித்தாரை வடிவழகு படுத்தும் பாடு) சர்வார்த்த ப்ரகாசகமான ஸ்ரீ திருமந்தரத்தையும் – சௌசீல்யாதி குணாதிக்யத்தையும் –ஸ்ரீ திரு மந்த்ரத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்ட இவரும் ஹ்ருஷ்டராய் -இவர் – (முன்பு ஆத்மாவை வெய்யில் வைத்து தேகத்தைப் பேணி வந்தவர் இப்பொழுது தான் ஆழ்வார் ஆகிறார்-காரார் திருமேனி காலம் அளவும் போய் சீரார் திருவேங்கடமே) (அரச மரத்தின் அடியில் ஆலி நாட்டுக்கு அரசனான கலியனுக்கு தெய்வங்களுக்கு அரசனான வயலாலி மணவாளன் மந்த்ர அரசான திரு மந்திரம் அருளிச் செய்த பின்பேஆழ்வார் ஆனார்-வேடுபரி உத்ஸவம் இன்றும் ஸேவிக்கிறோம்)
வாடினேன் வாடி -என்று தொடங்கி-உகந்து அருளிய நிலங்கள் தானே ஆஸ்ரயணீயம்-என்று நினைத்து –ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே –ஸ்ரீ பகவத் அர்ச்சாவதார ஸ்தலங்களுக்கு எல்லாம் பிரதானமாய் –அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -என்று சொல்லுகிறபடியே ஸ்ரீபாகவத கோஷ்டிக்கு எல்லாம் விரும்பி வர்த்திக்கும் ஸ்தலமான ஸ்ரீதிருவரங்கத் திருப்பதியிலே நித்ய வாசம் செய்து அருளக் கண்டு – நாள் தோறும் -கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோநிறை கொண்டது என் நெஞ்சினையே என்கிறபடியே ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய மங்கள விக்ரஹத்திலே திரு உள்ளம் குடி புகுந்து அத் தலைக்கு மங்களா சாசன பரராய் –திருக்கோபுரம் திருமதிள்-திருமண்டபங்கள்-திருமடைப்பள்ளி-முதலான கைங்கர்யங்களும் நடப்பித்துக் கொண்டு இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் -என்கிறபடியே –ஒருவராலும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற த்ரமிட சாஸ்திரத்தைக்கரை கண்ட ஜ்ஞானாதிக்யத்தை யுடையராய் –தமிழ்க் கவிகளுக்கு எல்லாம் தலைவராய் -நாலு கவிப் பெருமாள் -என்று திரு நாமம் பெற்று – ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷய ப்ராவண்யாதிசயத்தாலே அருளிச் செய்த ஸ்ரீஸூக்திகளான- திருவிருத்தம் – திருவாசிரியம் -ஸ்ரீ பெரியதிருவந்தாதி – திருவாய்மொழி-என்கிற நாலு பிரபந்தங்களிலும்சப்த ரசம் -அர்த்த ரசம் -பாவ ரசம் -என்கிற ரச விசேஷங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு விசேஷமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே அந்தமில் பேரின்பம் -பெற்றவர் ஆகையாலே -அத்தை மிகவும் உகப்புடனே நித்யமாக அனுசந்தித்துக் கொண்டு போரா நிற்க –
நல்லடிக் காலத்திலே –திருக்கார்த்திகை திவ்ய மகோத்சவத்திலே ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமார்களும் திரு மஞ்சனம் கொண்டு அருளி –செங்கமலக் கழலில் -ஸ்ரீ பெரியாழ்வார் -1-5-10-படியே நன்றாக ஒப்பித்து நிற்க – (செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலகஎங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-) அப்போது ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற பிரபந்தத்தை இட்டருளி –ப்ரதமம் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செவி சாற்றி அருளும்படி தேவ கானத்தில் ஏறிட்டு அனுசந்தித்து –திரு உள்ளம் உகக்கும் படி நன்றாக ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலும் ஏத்தி நிற்க –ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ஆழ்வார் திறத்திலே திரு உள்ளம் குடி புகுந்து –ஸ்ரீ ஆழ்வீர்-இப்போது ஒரு வார்த்தை சொல்லுவாரைப் போலே இரா நின்றீர் -நாம் உமக்குக் செய்யவேண்டுவது உண்டாகில் சொல்லும் -என்ன ஸ்ரீ ஆழ்வாரும் நித்ய சம்சாரியாய்ப் போந்த அடியேனை தேவரீர் இப்படி விஷயீ கரித்த பின்பு ஒரு குறை யுண்டோ –ஆகிலும் ஒரு விண்ணப்பம் யுண்டு -என்ன –ஸ்ரீ பெருமாளும் -அத்தைச் சொல்லும் -என்ன – ஸ்ரீ ஆழ்வாரும் -நாயன்தே நாயன்தே -தேவரீர் லோக அநுக்ரஹர்த்தமாகச் செய்து அருளின அர்ச்சாவதார ஸ்தலங்களில் பிரதானமான இந்த ஸ்தலத்திலே மார்கழி மாசம் சுக்ல பஷத்தில் ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)அன்று அத்யயன உத்சவம் கொண்டு அருளும் போது-(முன்பே வேதங்களை மட்டும் ஓதும் அத்யயன உத்சவம் நடந்து வந்துள்ளது)ஸ்ரீ சடகோபன் சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியையும் வேத பாராயணத்தோடு கேட்டருளிஇதுக்கு வேத சாம்யமும் அநுக்ரஹித்து அருள வேணும் -என்ன – (இதே போல் பின்பும் பாடிய வாளன் படித்துறை –வாளை வீசி கேட்டுப் பெற்ற வ்ருத்தாந்தம்) ஸ்ரீ பெரிய பெருமாளும் திரு உள்ளம் உகந்து -அப்படியே வேத சாம்யம் அநுக்ரஹித்தோம்-அத்யயன உத்சவத்தில் வேத பாராயணத்தோடு ஸ்ரீ திருவாய் மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள்-என்று அருளப்பாடு பிரசாதித்து அருளி ஸ்ரீ கலியன் நம்மை தேவ கானத்திலே மிகவும் பாடுகையாலே அவர் மிடறு நொந்தது -ஆன பின்பு நாம் இன்று தரித்தசிஷ்டமான எண்ணெய் காப்பை அவர் திருமிடற்றிலே தடவுங்கோள் -என்று அருளப்பாடு பிரசாதிக்க பின்பு ஸ்ரீ பெருமாள் பரிகரமும் அவர் திருமிடற்றிலே எண்ணெய் காப்பைச் சாத்த –அவரும் க்ருதார்த்தராய் மடமேற எழுந்து அருளின பின்பு
ஸ்ரீ திரு நகரியிலும் ஸ்ரீ ஆழ்வார் அத்யயன உத்சவத்துக்குஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளும் படிக்கு –ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முகப்பட்டயம் எழுதி சந்நிதிப் பேரர்களையும் ஸ்ரீ திரு நகரிக்கு அனுப்பி வைக்க – (இப்பொழுதும் திருக் கார்த்திகை உத்சவத்தில் கைத்தலை சேவையால் ஆஸ்தானம் வரை நம்பெருமாள் எழுந்து அருளுகிறார்) ஸ்ரீ ஆழ்வாரும் திரு முகப்பட்டயத்தை சிரசா வகித்து அத்யயன உத்சவத்துக்கு உதவும்படி ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளின பின்புஸ்ரீ திரு மங்கைமன்னனும் ஸ்ரீஆழ்வாரை எதிர் கொண்டு -திருவடி தொழுது -சந்நிதியிலே எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வாரைக் குளிரக் கடாஷித்து அருளி -தம் திரு உள்ளத்தில் உகப்பாலே – ஸ்ரீ நம் ஆழ்வார் -என்று திரு நாமம் சாற்றி – திருமாலை -ஸ்ரீசடகோபன் திருப்பரிவட்டம் முதலான வரிசைகளை பிரசாதிக்க – (ஸ்ரீ சடகோபனுக்கே ஸ்ரீ சடகோபன் சாத்தி அருளுகிறார் நம்மாழ்வார்) ஸ்ரீ திரு மங்கை மன்னனும் மற்றை நாள் ஏகாதசி தொடங்கிப் பத்து நாளாக -ப்ராத காலத்திலே வேத பாராயணமும் – ராத்திரி காலத்திலே ஸ்ரீ திருவாய் மொழியும் அநு சந்தானமாக கால விபாகம் பண்ணிவேதங்களை அநு சந்தித்துச் சாற்றி -ஸ்ரீ திருவாய் மொழி அநுசந்தித்துச் சாற்றும்போதுஸ்ரீ ஆழ்வார் முன்பு ஸ்ரீ திருவாய் மொழியைத் தலைக் கட்டின அளவிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்த படியை அநுகரித்துஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ பெருமாள் திருவடிகளிலே சேரும்படி பண்ணுவித்து ஸ்ரீ ஆழ்வார் பிரதி சம்வத்சரம் அத்யயன உத்சவத்துக்கு எழுந்து அருளி -ஸ்ரீ திருவாய் மொழி அநு சந்தானம் நடக்கும்படி பண்ணுவித்துதிருமாலை ஸ்ரீ சடகோபன் முதலான வரிசைகள் எல்லாம் ஸ்ரீ பெரிய பெருமாள் பிரசாதித்து அருளப்பாடும் பிரசாதித்து அருளும்படிப் பண்ணிக் கட்டளையும் இடுவிக்க பின்பு ஸ்ரீ ஆழ்வாரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ திரு நகரி ஏற எழுந்து அருளி -பிரதி சம்வத்சரம் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி –அத்யயன உத்சவத்தை பரிபாலனம் பண்ணிக் கொண்டு வர (அத்யயன உத்சவம் மாசி மாதம் இப்பொழுதும் திருத்தொலைவில்லி மங்கலத்தில் -நம்மாழ்வார் திரும்பிப் போகும் பொழுது நடந்தது)

(கலியுகம் தொடங்கி 398-வருஷம் திரு அவதாரம்-503 வருஷம் தன்னுடைச் சோதி -திருக் குறுங்குக்குடியில்) .
(86-திவ்ய தேச மங்களா சாசனம்-47 -இவர் மட்டுமே மங்களா சாசனம்-திருவரசு உள்ளது
தொடரும்———